சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, ஆதித்யா- எல்1 அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!
கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி கடைசி சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா- எல்1 விண்கலம் உயர்த்தப்பட்ட நிலையில், விண்கலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இஸ்ரோ கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 02.00 மணிக்கு புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தை விண்கலம் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில், “சுமார் 110 நாட்கள் பயணத்திற்கு பிறகு விண்கலம் எல்1 புள்ளியில் நிலைநிறுத்தப்படும்” எனக் கூறியுள்ளது. இதேபோல், மற்றொரு பதிவில், ஆதித்யா- எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ள இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!
ஆதித்யா விண்கலத்தில் உள்ள ‘STEPS’ எனப்படும் அறிவியல் ஆய்வுக் கருவி, தனது அளவீடுகளைத் தொடங்கியுள்ளது. பூமியில் உள்ள 50,000 தொலைவில் நிலவும் அதிவெப்பம், ஆற்றல், அயனிகள் மற்றும் எலட்ரான்களை அளவிடத் தொடங்கியதாகவும், இதன் மூலம் கிடைத்துள்ள தரவுகள், பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் செயல்பாட்டைப் பகுப்பாய்வுச் செய்ய உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.