Homeசெய்திகள்இந்தியாசூரியனை நோக்கி பயணம்.... இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு!

சூரியனை நோக்கி பயணம்…. இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு!

-

 

சூரியனை நோக்கி பயணம்.... இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு!
Photo: ISRO

இந்தியாவில் இருந்து முதன்முறையாக சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, அனுப்பப்படவுள்ள ஆதித்யா- எல்1 செயற்கைக்கோள், விண்ணில் பாய்வதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

சந்திரயான்- 3 திட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆதித்யா- எல்1 என்ற ஆய்வுக் களத்தை விண்ணு அனுப்பத் தயாராகி வருகின்றனர். இதற்காக, பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு ஆதித்யா- எல்1 செயற்கைக்கோள் வந்தடைந்ததாகவும், பிஎஸ்எல்வி- சி57 ராக்கெட் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புறப் பகுதியைக் குறித்து ஆய்வுச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

ஏற்கனவே, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ள, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதன்முறையாக அனுப்பப்படும் ஆதித்யா- எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்வது மட்டுமின்றி, சூரியனைத் தொடர்ந்துக் கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ