ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் பாய தயார் நிலையில் இருக்கும் புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆதித்யா- எல்1 விண்கலத்தை ஏவுவதற்கான உட்புறச் சோதனைகள் நிறைவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணில் பாய ஆதித்யா- எல்1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதற்கான புகைப்படங்களை அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, குறிக்கப்பட்ட எல்1 பகுதிக்கு செல்ல விண்கலத்திற்கு 120 நாட்கள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.