வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட பா.ஜ.க. அதிக ஓட்டுகள் வாங்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. அவை அனைத்தும் பொய்யான கருத்துக் கணிப்புகள் என்றும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் என்றும் மக்கள் சிரிக்கின்றனர்.
“அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்”- ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!
நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகள் வெளியிட்டு வருகிறது. அதில் நம்புவதற்கு முடியாத, மக்கள் புறக்கணிக்கும் வகையில் டைம்ஸ் நவ்- மேட்ரைஸ் என்சி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் இருக்கிறது.
டைம்ஸ் நவ்- மேட்ரைஸ் என்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 36 இடங்களைப் பிடிக்கும் என்றும், அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும், பா.ஜ.க. 1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.
மேலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 59.7 சதவீதம் வாக்குகளும், பா.ஜ.க. 20.6 சதவீதம் வாக்குகளும் மூன்றாவது இடத்தில் அ.தி.மு.க. 16 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறும் என்று அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் படி தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் வாங்கப் போகும் ஓட்டுகளை கூட்டினால் மொத்த 96.3 வருகிறது. மீதி 3.7 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே நான்காவதாக போட்டியிடும் அணி வாங்கப் போகிறது என்று அந்த கருத்து கணிப்பு வாயிலாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வுடன் எந்த கட்சி கூட்டணி அமைக்கப் போகிறது என்று தெரியவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள ஜி.கே. வாசன் கட்சிக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? ஜான் பாண்டியன் கட்சி போன்ற சிறு சிறு அமைப்புகளுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? நாம் தமிழர் கட்சி எவ்வளவு ஓட்டுகள் வாங்கும்?இதில் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போகிற போக்கில் பா.ஜ.க. 20.6 சதவீதம் வாக்குகள் வாங்கும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படி ஒரு கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது என்றால் அதை கருத்து திணிப்பு என்று கூறுவதா அல்லது டுபாக்கூர் கருத்து கணிப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
இதேபோன்று கடந்த 2014ல் பாஜக வெளியிட்ட போஸ்டரில் “தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் பா.ஜ.க., திகைப்பூட்டும் அதிரடி சர்வே ரிசல்ட்! சத்தியம் செய்த தமிழக மக்கள்! அதிர்ச்சியில் ஜெயலலிதா?” என்று வெளியிட்டு இருந்தனர். அதே போஸ்டரை சற்று மாற்றி கருத்துக் கணிப்பாக வெளியிட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க டுபாக்கூர் கருத்து கணிப்பு என்று மக்கள் சிரிக்கின்றனர்.