
“மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்” என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.
“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் போது நடந்த பிரச்சனை குறித்து காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தலைமையிலான அரசு தன்னை மிரட்டி பார்க்க முடியாது என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டிலேயே அதிக ஊழல் புகார்களுக்கு ஆளானவர் முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா, “மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம். தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை கைது செய்தால் அது அரசியலாக்கப்படும். ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது; சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தும். கவுகாத்தியில் ராகுல்காந்தி மக்களைத் தூண்டிவிட்டது தொடர்பாக எங்களிடம் ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்துளளார்.