முன்னாள் துணைப் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானிடெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
96 வயதான பிஜேபி தலைவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
பா.ஜ.க. கட்சி துவங்கியதில் இருந்து, அதிக காலம் தலைவராக பதவி வகித்தவர் அத்வானி. அவர் முதன்முதலில் 1986 இல் அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் பிறகு 1990 வரை பதவியில் இருந்தார். அதன் பிறகு 1993 முதல் 1998 வரையும், வெங்கையா நாயுடு ராஜினாமா செய்த பிறகு 2004-2005 வரையும் மீண்டும் பதவி வகித்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.