இந்திய நிலையை எண்ணி வேதனை – ராகுலிடம் மாலினி நெஹ்ரா வேதனை.
லண்டனில் இளம் தலைவர் ராகுல் காந்தியோடு உரையாடிய ஆர்எஸ்எஸ் பிரமுகரின் மகளான மாலினி நெஹ்ரா என்பவர், இந்தியாவின் நிலை குறித்து பரிதாபமாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ராகுல் காந்தி, இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல்காந்தியுடன் கலந்துரையாடிய ஆர்எஸ்எஸ் பிரமுகரின் மகள் மாலினி நெஹ்ரா, தனது தந்தை ஒரு ஆர்எஸ்எஸ் பிரமுகர் எனவும், அவர் நாட்டை அங்கீகரிக்க மாட்டார் எனவும் தெரிவித்தார்.
பிறந்து வளர்ந்த நாட்டை அங்கீகரிக்காத மில்லியன் கணக்காணவர்களில் நானும் ஒருவர் என கூறிய மாலினி நெஹ்ரா, நாம் நம் ஜனநாயகத்தை மீண்டும் அதிகாரம் செய்வோம் என தெரிவித்தார். அவருக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, உங்களின் தந்தை அந்த அமைப்பில் இருப்பது பற்றியும், அவர் நாட்டை அங்கீகரிக்கவில்லை என வெளிப்படையாக நீங்கள் கூறுவதன் மூலம், இந்த உரையாடல் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது என கூறினார்.
மேலும், இந்தியாவின் முக்கியப் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதும், ஜனநாயகத்தை பாதுகாப்பதும் ஒவ்வொரு இந்தியரின் கடமை எனவும் ராகுல்காந்தி பேசினார்.