Homeசெய்திகள்இந்தியாமாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி!

மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி!

-

 

மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி!
Video Crop Image

டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்புக்கு உயிரிழந்த மூன்றாவது விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம்.

தீபாவளி விடுமுறைக்கு பின் ஹிமானில் குமார் என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானி மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார். மருத்துவ பரிசோதனையில் 37 வயதான ஹிமானில் குமார், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவ அறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயிற்சி விமானத்தை இயக்குவதற்காக, டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது, அசௌகரியமாக உணர்ந்ததை சக பணியாளர்களிடம் கூறினார். உடனே சக பணியாளர்கள், விமானிக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விமானியை விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே, விமானியின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்வு!

கடந்த சில நாட்களாக விமானிகள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதனையடுத்து, விமானிகளுக்கு பணி நேர கட்டுப்பாட்டை விதித்து மத்திய விமானப் போக்குவரத்துக் கழகமும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ