மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, அஜித் பவார் அணி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தொடங்கப்பட்ட பயிலகங்கள்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, அன்றைய தினமே ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் முன்னிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.
அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார், பிரபுல் படேல் உள்ளிட்டோரை நீக்கி சரத் பவார் உத்தரவிட்டார். அதேபோல், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரின் ஆதரவு தனக்கு இருப்பதால், உண்மையான தேசியவாத காங்கிரஸ் நாங்கள் தான். எனவே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் எங்களுக்கு தான் சொந்தமன் எனக்கூறி தேர்தல் ஆணையத்துக்கு அஜித் பவார் அணி கடிதம் எழுதியிருந்தது.
யோகி பாபு, சிம்பு தேவன் கூட்டணியின் புதிய படம்….. டைட்டில் குறித்த அப்டேட்!
இந்த சூழலில், மகாராஷ்டிரா மாநிலம், முமபையில் உள்ள ஒய்.வி. சவான் மையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோரை அஜித் பவார் அணியைச் சேர்ந்த பிரபுல் படேல், ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திரா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு, மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் பாட்டீல், “தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சரத் பவாரிடம் கூறினோம். ஒற்றுமை குறித்து சரத் பவார் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. சுப்ரியா சுலே அழைப்பை ஏற்று மும்பை ஒய்.வி.சவான் மையத்தில் சந்தித்தோம்” எனத் தெரிவித்தார்.