பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டுருந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமத்தில் சாலையில் பயணிகளுடம் சென்ற பேருந்தை வழி மறித்து நின்ற யானை பஸ் கண்ணாடியை உடைத்தது. ஆந்திரா – தெலங்கானா மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை யானை மறித்து தாக்கியதால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தியதால் போக்குவரத்து முடங்கியது. மறுபுறம், வாகன ஓட்டிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றபோது அவர்கள் மீது யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.