Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது

-

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது

ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டது.

Andhra Pradesh: 5 wagons of goods train derail between Tadi and Anakapalli  - Times of India

ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரயில் தடம் புரண்டதால் தண்டவாளம் கடுமையாக சேதமடைந்தது. இதனால் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்றன.

விசாகப்பட்டினம்-விஜயவாடா வழித்தடத்தில் ஒரு சில ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களை ரயில்வே துறை ரத்து செய்தது மற்றும் வந்தே பாரத் அதிவிரைவு விரைவு நேரத்தை மாற்றியமைத்தது. தென்மத்திய ரயில்வே அதிகாரிகள் வால்டேர் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் கடுமையாக சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

MUST READ