Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

-

 

ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
Photo: ANI

ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டூரில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற விரைவு ரயில் மீது கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

லஞ்ச ஒழிப்பு வாரம் – கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

சிக்னல் காரணமாக விரைவு ரயில் நின்றுக் கொண்டிருந்ததாகவும், அதே பாதையில் வந்த பயணிகள் ரயில் மோதியதாகவும் தகவல் கூறுகின்றன. விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை

இதனிடையே, ஆந்திராவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 08912746330, 08912744619 ஆகிய பிஎஸ்என்எல் தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம். அதேபோல், 8106053051, 810505302, 8500041670 ஆகிய எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ