Homeசெய்திகள்இந்தியாஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது ; மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது ; மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் –  முதல்வர் சந்திரபாபு நாயுடு

-

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் என்று விஜயவாடா நீர், வான் வழித்தடம் விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடுஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நீர், வான் வழித்தடம் விமான சேவையில் சோதனை முறையில் பயணம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் விமான போக்குவரத்துத் துறையுடன் இணைந்து மாநில சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக நீர், வான் வழித்தட விமான போக்குவரத்து சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் பிரகாசம் தடுப்பணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர், வான் வழித்தட விமான சேவையின் சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

பின்னர் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் விஜயவாடாவில் பிரகாசம் அணையில் இருந்து 14 பேர் அமரும் விதமாக கொண்ட விமானத்தில் புறப்பட்டு ஸ்ரீசைலம் அணைக்கு சென்றனர். தண்ணீரில் இருந்து நீரை கிழித்து கொண்டு சென்ற விமானம் சிறிது நேரத்தில் வானில் பறந்து சென்று மீண்டும் 30 நிமிடத்தில் ஸ்ரீசைலம் அணையில் தண்ணீரில் இறங்கியது.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு நீர் வழித்தட விமான சேவையை தொடங்கி வைத்த முதல்வர் சந்திரபாபு பின்னர் நடந்த கூட்டத்தில் பேசுகையில் நீர் வான் வழித்தட விமானப் பயணம் ஒரு புதுமையான அனுபவம் வாய்ந்த பயணம். மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம், மாநிலத்தை மேம்படுத்தி, செல்வ வளத்தை பெருக்கி, அந்த செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதே இந்த கூட்டணி அரசின் கொள்கையாகும். மக்கள் வெற்றி பெற வேண்டும், அதற்கு அரசு துணை நிற்க வேண்டும் என்ற முழக்கத்துடன் தான் தேர்தலுக்கு சென்றேன்.

மக்கள் வெற்றி கொடுத்த நிலையில் மாநிலத்தை வளர்ச்சியில் முதலிடம் கொண்டு வர பாடுபடுவோம் என்றார். நான்காவது முறையாக முதலமைச்சராகி விட்டேன். ஆனால் கடந்த மூன்று முறை எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இந்த முறை அரசு நிர்வாகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பின்னாள் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் அனைத்தும் மீண்டும் பழையப்படி மீட்கும் வரை தூங்க மாட்டேன்.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டிலேயே முதன்முறையாக நீர் வான் வழித்தட சுற்றுலாவிற்கு பயன்படுத்தும் வகையில் ஆந்திராவில் இருந்து தொடங்கும். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னை கேலிக்கூத்தாக சித்தரித்தார்கள் இப்போது உலகின் எந்த மூலையில் பார்த்தாலும் தெலுங்கர்கள் தான் உள்ளனர். அதற்கு அடித்தளன் இட்டது நான். எப்பொழுதும் புதிய சிந்தனைகளையே சிந்திக்க வேண்டும். வரும் நாட்களில் விமான நிலையங்கள் மட்டுமின்றி நீர் நிலைகளில் விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் .

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடுகடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த தவறான ஆட்சியை சரிசெய்வதே தனது நோக்கம். மாநிலத்தில் பழுதடைந்த அமைப்பை சீரமைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஆந்திராவின் இழந்த பிராண்ட் இமேஜை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளோம். மாநிலம் வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து எங்கள் கூட்டணிக்கு வெற்றியை கொடுத்துள்ளனர்.

தற்போது மாநிலத்தை மாற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளேன். தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ள லோகேஷிடம் 30 நாட்களில் 100 அரசு சேவைகள் ஆன்லைனில் வர வேண்டும் என்று கூறியுள்ளேன். வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்தால் எந்த சான்றிதழாக இருந்தாலும் வாட்ஸ் ஆப் மூலம் டவுண்லோட் செய்யும் விதமாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் குறித்தும் வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு ,ஆந்திராவில் 4 வழித்தடங்களில் நீர் வான் வழித்தட விமான சேவைக்கு பரிந்துரைகள் உள்ளது. இதனால் சுற்றுலாத் துறையும் கணிசமான வளர்ச்சி அடையும். விமான நிலையம் இல்லாவிட்டாலும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் மட்டுமே இருந்தால் போதுமானது இந்த விமான சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு

கடந்த காலங்களில், குஜராத்தில் இந்த விமானம் சேவை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிட் மற்றும் பல்வேறு காரணங்களால் அவை வெற்றிபெறவில்லை. சாமானியர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்யும் வகையில் விலை நிர்ணயம் செய்து கொண்டு வரப்படும். இன்னும் 3-4 மாதங்களில் ஆந்திராவில் இந்த விமான சேவை முழுமையாக பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்றார்.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் -  முதல்வர் சந்திரபாபு நாயுடு
மாநிலத்தில் உள்ள 4 வழித்தடங்களில் இயக்க பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விஜயவாடா – நாகார்ஜுன சாகர், சாகர் – விஜயவாடா, விஜயவாடா – ஐதராபாத், ஐதராபாத் – விஜயவாடா வழித்தடங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றை அமராவதியுடன் இணைக்கும் வகையில் ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடந்த சோதனை ஓட்டத்தின்படி மார்ச் 2025 முதல் இந்த விமான சேவை தொடங்கும் என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல…

MUST READ