Homeசெய்திகள்இந்தியாஅண்ணாமலையின் நடைபயணம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

அண்ணாமலையின் நடைபயணம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

-

 

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!
Photo: ANI

டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மீது மக்களவையில் நான்கரை மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், ஜனநாயக படுகொலைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்

தி.மு.க. சார்பாக பேசிய தயாநிதிமாறன் எம்.பி., “தமிழக ஆளுநர் 13 மசோதாக்களை நிலுவையில் வைத்து, மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சி வந்தால் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நேர்மையாகச் செயல்படும். சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது” என்றும் கூறினார். இதனால் மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசினார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், சட்டப்பேரவையைக் கூட முறையாகக் கூட்டுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குலையும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்ணாமலை நடத்தி வரும் நடைப்பயணத்தால் தி.மு.க. கலக்கமடைந்துள்ளது. இதுவே தயாநிதிமாறன் உரையில் எதிரொலித்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!

அரசின் வாதங்களை ஏற்காத எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

MUST READ