Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- அமைச்சர் நமச்சிவாயம்

-

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடந்த பெஞ்சல் புயல், முற்பகல் 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது புதுச்சேரிக்கு அருகே 30 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நிலப்பரப்பில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டியது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

அதன்படி தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக  புதுச்சேரி வெள்ளத்தில் தத்தளிப்பதால்  புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

 

“இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம்”… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 

MUST READ