Homeசெய்திகள்இந்தியாடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவல்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவல்!

-

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி நீதிமன்ற காவல் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் உத்தரவிட்டுள்ளார்.

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த புதன்கிழமை (ஜீன் 26-ம் தேதி) அன்று சிபிஐ கைது செய்தது. அன்றைய நாள் முதலே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ன்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கோரிக்கை.

மூன்று நாள் காவல் நிறைவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அமிதாப் ராவத் முன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

MUST READ