Homeசெய்திகள்இந்தியாமணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் மறுப்பு

மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? – ஃபாக்ஸ்கான் மறுப்பு

-

மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் மறுப்பு

மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? – ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஐபோன் அசெம்ப்ளி உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண் தொழிலாளர்களை வேலை செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸின் சமீபத்திய விசாரணையில் குடும்பப் பொறுப்புகள் மற்றும் பாரம்பரிய நகைகள் அவர்களின் வேலைவாய்ப்பிற்கு இடையூறாக இருப்பதாகக் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக, ஃபாக்ஸ்கான் குறித்து இந்தியாவின் முன்னாள் மனிதவள நிர்வாகி எஸ்.பாவுல், வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்க்க ஃபாக்ஸ்கான் நிர்வாகம் வாய்மொழியாக பணியமர்த்தும் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்துகிறது. மேலும் ”திருமணமாகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகம் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஃபாக்ஸ்கான் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் உள்ள பல ஆதாரங்களை வைத்து இந்த விலக்கு கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் திருமணமான இந்துப் பெண்கள் அணியும் நகைகள், மோதிரங்கள் மற்றும் நெக்லஸ்கள் போன்றவை மின்னியல் வெளியேற்றம் காரணமாக உற்பத்தி செயல்முறையில் தலையிடலாம் அல்லது திருட்டு தொடர்பான பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்காக சில ஏஜென்சிகள் திருமண நிலையை மறைக்க உதவுவதையும் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் 2022 ஆம் ஆண்டில் தங்கள் பணியமர்த்தல் நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளை ஒப்புக்கொண்டன மற்றும் திருத்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியுள்ளன. இருப்பினும், இத்தகைய பாரபட்சமான நடைமுறைகள் 2023 மற்றும் 2024 வரை நீடித்தன என்பது ராய்ட்டர்ஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

வழக்கறிஞர்கள் அறிக்கை, பணியமர்த்தும்போது திருமண நிலையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்தியச் சட்டங்கள் திட்டவட்டமாக அனுமதிக்கவில்லை என கூறுகிறது. இருப்பினும், ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கானின் சொந்தக் கொள்கைகள் அத்தகைய நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு “விரிவான அறிக்கையை” சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் மறுப்பு1976 ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தின் பிரிவு 5 -ஐ மேற்கோள் காட்டி, “ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்த பாகுபாடும் காட்டப்படக்கூடாது” என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெளிவாகக் கூறுகிறது.
மாநில அரசுக்கு இந்தச் சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் அதிகாரம் உண்டு என்பதால், விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.

மேலும், பிராந்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் “உண்மையான அறிக்கையை” வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஜூன் 27 ஆம் தேதி ”திருமணமான பெண்களுக்கு பணி வழங்கப்படுவதில்லை என்ற புகாருக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலக ஆபரணங்களை அணிய தடை விதித்ததாகவும், திருமணமான பெண்களை பணியமர்த்தக் கூடாது என கொள்கை முடிவு ஏதும் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் தர ஒன்றிய தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் ஃபாக்ஸ்கான் பதில் அளித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றுவோரில் 70% பேர் பெண்கள் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பி்டத்தக்கது.

MUST READ