ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அதிகாரிகள் அனுமதி கோரினர்.
ஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா விலகல்!
சிறப்பு நீதிபதி முன்பு விசாரணை நடைபெற்ற நிலையில், 2021- 2022ல் டெல்லி கலால் கொள்கையை அமல்படுத்தியபோது, தென் மாநிலங்கள் ஒன்றிடம் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பல கோடி ரூபாய் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் தேர்தலில் போட்டியிட அந்த நிறுவனத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் கோரப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கோவா தேர்தலில் போட்டியிட 4 ஹவாலா வழிகள் மூலம் 45 கோடி ரூபாய் பெற்றதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் செல்போன் அழைப்பு விவரங்கள் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் முக்கியமான சதிகாரர் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி முதலமைச்சரை கைது செய்ய எந்த அவசியமும் இல்லை. அமலாக்கத்துறையை நீதிபதியாகவும், நீதியை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும் மாற்றிவிடப்பட்டதாக கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, விசாரணையை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.