அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (மே 03) மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், “தேர்தல் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்-தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு
அதிகாரப்பூர்வ கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் தேவை; வரும் மே 07- ஆம் தேதி அமலாக்கத்துறை தரப்பு வாதமும் தொடரும்” எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.