Homeசெய்திகள்இந்தியாமுதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

-

- Advertisement -

முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கிறார்.

Image

டெல்லியில் ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அந்த மாநிலத்தில் குடிமைப் பணி அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் வசமே உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நிர்வகிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. குடிமைப் பணி அதிகாரிகளை நியமிப்பது, அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யும் முழு உரிமையும் டெல்லி அரசுக்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் டெல்லியில் அதிகாரிகளை மாற்றும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்க உள்ளார்.

MUST READ