அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் போது நடந்த பிரச்சனை குறித்து காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தலைமையிலான அரசு தன்னை மிரட்டி பார்க்க முடியாது என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகி
கூட்டத்தைத் தூண்டிவிட்ட புகாரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மீது கவுகாத்தி காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது. தனது ஏழாவது நாள் நடைப்பயணத்தில் பார்க்கிட்டா மாவட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய ராகுல்காந்தி எம்.பி., “தன் மீது அவர்களால் இயன்ற அளவுக்கு வழக்குப்பதிவுச் செய்தாலும் தன்னை மிரட்டிப் பார்க்க முடியாது; நாட்டிலேயே அதிக ஊழல் புகார்களுக்கு ஆளானவர் முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.வும் அசாமில் வரலாறு, மொழி, கலாச்சாரத்தை அழிக்கப் பார்க்கிறது.
மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து
வரும் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அசாம் மாநிலத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்போம். பிரதமர் நரேந்திர மோடியாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் அசாம் மாநில முதலமைச்சர் இயக்கப்படுகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.