Homeசெய்திகள்இந்தியாசட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!

-

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதச்சார்பற்ற ஜனதா தளம்?
File Photo

தொடரும் உட்கட்சிப் பூசல்களால் கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? என முடிவு செய்ய இயலாமல் பா.ஜ.க. திணறி வருகிறது.

2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததற்கு கோஷ்டி மோதல்கள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகும் உட்கட்சிப் பூசல்கள் அடங்காததால் கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை மூன்று மாதங்களாக முடிவுச் செய்யாமல் பா.ஜ.க. திணறி வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பசனா கவுடா எத்தனல் அந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று கட்சியில் உள்ள இன்னொரு பிரிவு வலியுறுத்தி வருகிறது. கர்நாடகா சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உள்ளதால், அந்த கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தில் செயல்படலாம்.

அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்தில் உள்ள இந்த முக்கிய பொறுப்பிற்கு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது அந்த கட்சியின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே கர்நாடகா மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

276 கி.மீ. ஓடியே 13,748 ரன்களை எடுத்த விராட் கோலி!

பா.ஜ.க.வின் கர்நாடகா மாநில பிரிவிற்கு ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்படுவதன் மூலம் இரு சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என்பது பா.ஜ.க.வின் எண்ணமாக உள்ளது.

MUST READ