Homeசெய்திகள்இந்தியாமகனின் திருமணத்திற்கு செலவாகும் ரூ.10000 கோடியை நன்கொடையாக வழங்கிய அதானி..!

மகனின் திருமணத்திற்கு செலவாகும் ரூ.10000 கோடியை நன்கொடையாக வழங்கிய அதானி..!

-

- Advertisement -

தனது மகனின் திருமணத்தில், சமூக சேவைகளுக்காக ரூ.10,000 கோடி நன்கொடை அளித்து கவுதம் அதானி முன்மாதிரியாக திகழ்கிறார். கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி அகமதாபாத்தின் அதானி சாந்திகிராம் நகரத்தில் உள்ள பெல்வெடெர் கிளப்பில் நேற்று திவாவை மணந்தார். கடந்த மாதம் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, தனது மகனின் திருமணம் “எளிய மற்றும் பாரம்பரிய முறையில்” நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

தனது வார்த்தையை கடைப்பிடித்து, தனது மகன் ஜீத் அதானியின் திருமணத்தை எளிமையாக நடத்தினார். ஆடம்பரமாகவும் அற்புதமாகவும் இந்தத் திருமணம் நடக்கும் என்ற வதந்திகள், ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெரும் கோடீஸ்வர தொழிலதிபர் தனது மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தியது மட்டுமல்லாமல், ரூ.10,000 கோடியையும் நன்கொடையாக வழங்கினார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரிடமிருந்து இந்த தனித்துவமான திருமணப் பரிசு பல்வேறு சமூக நோக்கங்களுக்காக செலவிடப்படும்.

ஜீத் மற்றும் திவா ஆகியோரின் திருமணத்திற்கு ஆகும் மிக பிரம்மாண்டமான கட்டமைப்பு களுக்கான செலவை மொத்தமாக நன்கொடையாக அளிக்க முடிவு செய்து விட்டதாக அதானி குடும்பம் அறிவித்துள்ளது.

அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ச்லவிடப்படும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மலிவு விலையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மலிவு விலையில் உயர்மட்ட பள்ளிகள் மற்றும் உறுதியான வேலைவாய்ப்புடன் கூடிய மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த பணம் செலவிடப்படும்.

வெள்ளிக்கிழமை திருமணம் எளிமையாக நடந்தது, வழக்கமான மத சடங்குகள்,குஜராத்தி பாரம்பரிய விழாவுடன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், அதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், பொழுதுபோக்கு கலைஞர்கள் மற்றும் பிற பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை.

ஜீத் அதானி தற்போது அதானி விமான நிலையங்களில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.ஆறு சர்வதேச விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறார். நவி மும்பையில் ஏழாவது விமான நிலையத்தைக் கட்டுவதை மேற்பார்வையிடுகிறார். ஜீத் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியின் முன்னாள் மாணவர்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கவுதம் அதானி ‘மங்கள் சேவா’ என்ற திட்டத்தை அறிவித்தார்.இது புதிதாக திருமணமான மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு திட்டம். ஆரம்பத்தில், ஒவ்வொரு ஆண்டும், இதுபோன்ற 500 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இந்த முயற்சியைத் தொடங்க ஜீத் அதானி 21 புதிதாகத் திருமணமான திவ்ய தேசப் பெண்கள், அவர்களது கணவர்களைச் சந்தித்தார்.

ஜனவரி 21 அன்று பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில், அவரது மகனின் திருமணம் பரவலாக ஊகிக்கப்பட்டது போல “பிரபலங்களின் மகா கும்பமேளா”வாக இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ​​கௌதம் அதானி, “நிச்சயமாக இல்லை. நாங்கள் சாதாரண மக்களைப் போன்றவர்கள். ஜீத் இங்கு அன்னை கங்கையின் ஆசிகளைப் பெற வந்தார். அவரது திருமணம் எளிமையான, பாரம்பரிய முறையில் நடக்கும்” என்று கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கு 5000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் உலகின் மிகப் பிரபலமான பாடகர்கள் நடிகர்கள் விஐபிகள் முன்னாள் பிரதமர்கள் என நூற்றுக்கணக்கான பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு உபசரித்ததில் பல நூறு கோடி ரூபாய் பண விரயம் செய்யப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்தது.

அம்பானி குடும்பம் போல் இல்லாமல் அதானி குடும்பம் நல்ல முறையில் சிந்தித்து ஆடம்பர திருமணத்திற்கு பதில் அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்கும் இந்த செயல் பாராட்டுக்குரியது.

MUST READ