அயோத்தியில் திறக்கப்படவுள்ள ராமர் கோயில் மூலம் அந்த நகரம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
‘நான் உங்களுக்காக இருக்கிறேன்’….. கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன் புழுதிப் பறக்கும் குறுகிய சாலைகளுடன் மிகவும் தங்கியிருந்த ஒரு நகரம் அயோத்தி. தற்போது கோயில் பணிகள் தொடங்கிய பின் அந்நகரம் அதிசயத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வாடிகன், மெக்கா போன்ற உலகப் புகழ் மிக்க மத வழிபாட்டு தலங்களைப் போல அயோத்தியை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
ராமர் கோயில் திறக்கப்பட்ட முதல் சில மாதங்கள் வரை தினசரி 5 லட்சம் பேரும், அதற்கு பின் தினசரி 3 லட்சம் பேரும் அயோத்தி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அந்நகரம் சுமார் 31,000 கோடி ரூபாய் செலவில் 200 கட்டமைப்புத் திட்டங்களுடன் பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அயோத்தியை எளிதாக அணுக வசதியாக, சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டதுடன், இரட்டை ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் 620 கோடி ரூபாய் செலவில் ரயில் நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சர்வதேச விமான நிலையமும் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளனர்.
மாதவன் – ஜோதிகாவின் சைத்தான்…. மார்ச் மாதம் ரிலீஸ்….
சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை கட்டப்பட்டு வருகின்றனர். அயோத்தி காண உள்ள பிரம்மாண்ட வளர்ச்சியால், அங்கு நில மதிப்பும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது ஒரு சதுர அடி 18,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ராமர் கோயில் வருகையால் அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் வரும் ஆண்டுகளில் பெரும் பொருளாதார வளர்ச்சிக் காணும் என்றும் நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மட்டும் நாடெங்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கும் என இந்திய வணிகர்கள் கூட்டமைப்புக் கணித்துள்ளது.