Homeசெய்திகள்இந்தியாஅயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர்!

அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர்!

-

 

அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர்கோயில் அடுத்த மாதம் திறக்கப்படும் நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நேரில் பார்வையிட்டார்.

மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!

“மகரிஷி வால்மீகி” என பெயரிடப்பட்ட அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். அயோத்தி விமான நிலைய முனையம் 6,500 சதுர மீட்டரில் ரூபாய் 1,450 கோடியில் கட்டப்பட்டுள்ளது. அயோத்திக்கு ரூபாய் 11,000 கோடி பிற மாவட்டங்களுக்கு ரூபாய் 4,600 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.

அதேபோல், அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை மற்றும் ராமஜென்ம பூமி பாதை ஆகிய நான்கு பாதைகளையும் பிரதமர் திறந்து வைத்தார். பின்னர், அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை வாகன பேரணியாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

அதன் தொடர்ச்சியாக, அயோத்தி ரயில் நிலையத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கோவை- பெங்களூரு உட்பட ஆறு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சென்னை- கோவை, சென்னை- நெல்லை, சென்னை- மைசூரு ஆகிய மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ