Homeசெய்திகள்இந்தியாஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்

ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்

-

ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசம்:  ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி

வங்காளதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,292 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், 1,024 பேர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில், வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உள்ளது. கடந்த 21 நாட்களில் மட்டும் 109 இறப்புகள் மற்றும் 20,465 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

வங்காளதேசத்தில் இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,977 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 62,423 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 281 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மழை பாதிப்பு இருக்கும் என்பதால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

MUST READ