விதிகளைக் கடைப்பிடிக்காத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஎல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!
அதன்படி, ஆர்பிஎல் வங்கிக்கு 64 லட்சம் ரூபாயும், பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாயும் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பஜாஜ் பைனான்ஸுக்கு 8.5 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில், உரிய திட்ட மதிப்பீடு ஆய்வுச் செய்யாத காரணத்தால், பேங்க் ஆப் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்!
முன்னணி பங்குதாரர்களிடம் இருந்து ஆண்டு கணக்கு அறிவிப்பிற்கு ஒப்புதல் பெறாத விதிமீறலுக்காக, ஆர்பிஎல் வங்கிக்கு அபராதமும், ரிசர்வ் வங்கியின் விதிகளில் சிலவற்றைக் கடைப்பிடிக்காத காரணத்திற்காக, பஜாஜ் பைனான்ஸுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.