Homeசெய்திகள்இந்தியாஅம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது - மக்களவையில் காரச் சாரமான விவாதம்

அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது – மக்களவையில் காரச் சாரமான விவாதம்

-

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்காருக்கு ஏன் காலதாமதமாக பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கியது? – மக்களவையில் நடைபெற்று வரும் இந்திய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி!

அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது - மக்களவையில் காரச் சாரமான விவாதம்நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக இந்திய அரசியல் சாசனம் குறித்தான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சி சார்பில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநில விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிப்பதாகவும் 2014ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலங்களுக்கு செல்ல முடியாத சூழலை இருந்ததாக தெரிவித்தார். இதேபோல் இந்திய அரசியலமைப்பு குறித்து பேசும் காங்கிரஸ் கட்சி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரை ஏன்? மக்களவைக்கு அடுத்தடுத்த தேர்ந்தெடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது - மக்களவையில் காரச் சாரமான விவாதம்இதேபோல் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய, காங்கிரஸ் கட்சியால் இப்போது புகழ் பாடப்படும் அம்பேத்கருக்கு 1990ம் ஆண்டே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், நேரு மற்றும் இந்திரா காந்திக்கும் அம்பேத்கருக்கு முன்பே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது எப்படி? எனவும் கிரன் ரிஜிஜு கேள்வி எழுப்பினார்.

உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது

நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவருக்கு அவரே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டதாகவும், ஆனால் அம்பேத்கருக்கு மிக கால தாமதமாகவே நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது எனவும் குற்றம் சாட்டினார். இதனால் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

MUST READ