பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதை பெறும் 50 ஆவது நபர் என்ற பெருமையைப் பெறுகிறார் எல்.கே.அத்வானி.
“தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும்”- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!
‘பாரத ரத்னா விருது பெறுவோருக்கு மத்திய அரசு வழக்கும் சலுகைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருது ‘பாரத ரத்னா’. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு பிரதமர் சம்பளத்தில் 50 சதவீதம் அதாவது மாதத்திற்கு ரூபாய் 80,000 வழங்கலாம். வாழ்நாள் முழுவதும் அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.
“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது”- விரிவான தகவல்!
‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு தேவைப்பட்டால் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும். விமான நிலையங்களில் அவர்களுக்கு விஐபி அந்தஸ்து வழங்கப்படும். ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர்கள் எங்கு சென்றாலும் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்ளலாம்.