பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.
துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதின் வரலாற்றையும், சிறப்பம்சங்களையும் விரிவாகப் பார்ப்போம்!
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது தான் பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும், அதில் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்தோருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
பாரத ரத்னா விருது கடந்த 1954- ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூதறிஞர் ராஜாஜி, குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், விஞ்ஞானி சி.வி.ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 1954- ல் உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?
கடந்த 1955- ல் உயிரிழந்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர், எம்.ஜி.ஆர். ஆகியோர் மறைவுக்கு பின் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. முதன்முறையாக 2013- ஆம் ஆண்டு விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2014- ஆம் ஆண்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியர் அல்லாதவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது அறிமுகப்படுத்தப்பட்ட 1954- ஆம் ஆண்டு முதல் இதுவரை 49 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருது பெறும் 50 ஆவது நபராக எல்.கே.அத்வானி உள்ளார். பத்ம விருதுகளில் இருந்து பாரத ரத்னா விருது சற்றே மாறுபடுகிறது. பாரத ரத்னா விருதுக்கு தேர்வானவரின் பெயரை, குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார்.
துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
அதன் பிறகு பாரத ரத்னா விருதுக்கு தேர்வானவர்களின் பெயர் அரசிதழில் வெளியிடப்படும். பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
பாரத ரத்னா விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக பாரத ரத்னா என்ற அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது. பாரத ரத்னா விருதில் செப்பு உலோகத்தால் ஆன இலையின் மேல், பிளாட்டினம் உலோகத்தாலான சூரியன் இடம் பெற்றிருக்கும். இலையின் ஓரங்களும் பிளாட்டினத்தால் செய்யப்பட்டிருக்கும்.
பாரத ரத்னா என்ற வார்த்தை இந்தியில் வெள்ளியால் எழுதப்பட்டிருக்கும்; அதன் பின்புறம் அசோக சக்கரத்தின் கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ என்று இந்தியில் எழுதப்பட்டிருக்கும். தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம், சுப்புலட்சுமி, சிதம்பரம் சுப்ரமணியம் உள்ளிட்ட 9 பேர் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளனர்.