Homeசெய்திகள்இந்தியா"பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது"- குமாரசாமி பேட்டி!

“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!

-

- Advertisement -

 

'தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம்'- காரணம் என்ன தெரியுமா?
File Photo

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!

அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 4 இடங்களை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க முடிவுச் செய்துள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எடியூரப்பா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதனை மறுத்துள்ள கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற கட்சியின் தலைவருமான குமாரசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் தான் உள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!

மேலும், கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகியவற்றில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

MUST READ