Homeசெய்திகள்இந்தியாபா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கு- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை!

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கு- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை!

-

- Advertisement -

 

Video Crop Image

புதுச்சேரியில் பா.ஜ.க. பிரமுகர் கொலைச் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா ட்ரீட்… இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் செந்தில் குமரன், கடந்த மார்ச் 26- ஆம் தேதி வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், வில்லியனூர் காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டனர். பின்னர், செந்தில் குமரனின் வீட்டில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

MUST READ