பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, எல்.கே.அத்வானியைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு….அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானிக்கு எனது வாழ்த்துக்களைத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது எனக்கு மிகவும் உணர்ச்சிக்கரமான தருணம்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்.கே.அத்வானியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. அடிமட்ட தொண்டர் முதல் துணை பிரதமர் வரை பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். மத்திய உள்துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் எல்.கே.அத்வானி பணியாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது விவாதங்கள் எப்பொழுதும் முன்னுதாரணங்களாக இருந்துள்ளன” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!
எல்.கே.அத்வானிக்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.