ஹரியானா மாநிலம், அம்பாலா (Ambala) மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகியுமான ரத்தன் லால் கட்டாரியா (வயது 72) உடல் நலக்குறைவால், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (மே 18) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கங்குலிக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு
கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூன் 5- ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து மக்களவை உறுப்பினராக திறம்பட செயலாற்றியுள்ளார். அவரது திறமையைக் கவுரவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 2019- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை மத்திய ஜல் சக்தி மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!
ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.