கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா ரமணி மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
பெங்களூருவில் உள்ள கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு வருகை தந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்களை வரவேற்க, அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.
“40 தொகுதிகளையும் வெல்ல ஆயத்தமாக வேண்டும்”- தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
அப்போது, சில சட்டமன்ற உறுப்பினர்கள் காகிதங்களைக் கிழித்து துணை சபாநாயகர் ருத்ரப்பா ரமணி மீது வீசி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒழுங்கீன நடவடிக்கையாக அஸ்வத் நாராயண், சுனில் குமார், அசோகா உள்பட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.