Homeசெய்திகள்இந்தியாதமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

-

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா
கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

சட்டமன்ற தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சாரக் கூட்டம் பாஜக சார்பில் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கிய போது தமிழர்கள் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கச் செய்தனர்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது திடீரென பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த சொல்லி கன்னட வாழ்த்து பாடலை ஒலிக்கச் செய்தார். அவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

தேர்தல் களத்தில் தமிழர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த பாஜக தலைவர்கள் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைவர்களின் செயலுக்கு நாடு முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

MUST READ