Homeசெய்திகள்இந்தியா7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

-

7 மாநில இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை, 2024 மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவுதமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இடைத்தேர்தல் நடந்த 13 தொகுதிகளில், INDIA கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரசே முன்னிலை வகிக்கிறது.

ம.பி. அமர்வாரா தொகுதி, உத்தராகண்ட் பத்ரிநாத் தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

MUST READ