Homeசெய்திகள்இந்தியாதெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்

தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்

-

தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tiffen

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டமும் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 31,008 அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதனால் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். காலை உணவுத் திட்ட செலவினங்களுக்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உப்புமா, கிச்சடி, சிறுதானிய உணவுகள், வெண்பொங்கல், கோதுமை ரவை உப்புமா வழங்கப்பட்டு வருகிறது.

இத்திடம் தமிழக மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் ஒன்று முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்ப்பட்டுள்ளது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார். ரூ.40 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் தெலங்கானாவில் 43 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.

inspection

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட 5 அதிகாரிகள் குழு சென்னைக்கு வந்து முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டது குறிப்பிடதக்கது.

MUST READ