Homeசெய்திகள்இந்தியாயார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!

யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!

-

 

யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!
Photo: ANI

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சிங்கின் பின்னணி குறித்தும், அவர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்

வாழை இலை, வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி!

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்களைப் பெற்றுத் தந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்த மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன், இவரும், சில பயிற்சியாளர்களும் தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிஜ் பூஷன் ஓர் அரசியல் தலைவர் என்பதும், அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆம் ஆத்மீ, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரிஜ் பூஷன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன், உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்திலேயே பிரபல மல்யுத்த வீரராக இருந்தவர். 1980-ல் மாணவர் அரசியலில் நுழைந்து அயோத்தியில் ராம் மந்திர் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். 1992- ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

முதன்முறையாகத் தேர்தல் அரசியலில் களமிறங்கி 1991- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 1999, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் தொடர் வெற்றியை ஈட்டினார்.

நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!

கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பரில் ராஞ்சியில் விளையாட்டு வீரரை, பகிரங்கமாக அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அதற்காக, அவர் மன்னிப்பும் கேட்கவில்லை. இவர் மீது தடா வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் மீது, மல்யுத்த வீராங்கனைகள் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

MUST READ