Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல - பீகார், ஆந்திராவிற்கான பட்ஜெட்

இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல – பீகார், ஆந்திராவிற்கான பட்ஜெட்

-

இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல- பீகார், ஆந்திராவிற்கான பட்ஜெட்

2024-2025 ஆம் ஆண்டிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை இந்தியாவிற்கானது அல்ல. அது பீகார், ஆந்திரா ஆகிய இரு மாநிலத்திற்காக மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையாக தெரிகிறது.

2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் கட்சி எம்.பி, அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திரா, பீகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

பீகார்:
பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், பாசனத்திற்காகவும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீகார் மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளந்தா பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கயா மற்றும் புத்தகயா கோவில்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள புராதனமான சின்னங்கள், கோவில்களை மேம்படுத்த பட்ஜெட்டில் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பு – நிர்மலா சீதாராமன்

ஆந்திரா:
ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆந்திராவில் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்த நிலையில், ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ