Homeசெய்திகள்இந்தியாவேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

-

நாடாளுமன்ற மழைக்கால பட்ஜெட் கூட்ட தொடரில் இன்று மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பேசிய அவர் “ஏற்றுமதியை பாதிக்கக்கூடிய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 7 சதவீதம் வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25ம் ஆண்டிற்கு முந்தைய நிதியாண்டில் கணிக்கப்பட்ட 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக உள்ளது. மார்ச் 2025ல் முடிவடையும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் ஆந்திரம், பிகாருக்கு சிறப்பு நிதி!

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு, அனைத்து துறைகளிலும் முதல் முறையாக பணிக்கு செல்பவர்களுக்கு 3 தவணைகளாக நிதியுதவி, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியுதவி, உயர்கல்வி கடனுக்கான உச்சவரம்பு உயர்வு, மேலும், மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகளை அளிக்க 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MUST READ