பாஜவின் ஆபரேஷன் தாமரை, தேர்தல் பத்திரம் என்ற புகழ் இல்லா பட்டியலில் புல்டோசர் நீதியும் இணைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘புல்டோசர் நீதி’ அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் உரத்த குரலில் அழுததாகவும், இருப்பினும், நடைமுறையில் பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்தன. மேலும் மக்களில் ஒரு பிரிவினர், புல்டோசர் நீதி ‘நீதியை வழங்குவதற்கான நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு சமம்’ என்றும் நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் வடிவமைக்கப்பட்ட திரு.ஆதித்யநாத்தின் புல்டோசர் நீதி மாதிரியை ஏற்றுக்கொள்வதில் ஒவ்வொரு பாஜக அரசாங்கமும் பெருமிதம் கொண்டதாகவும், ‘புல்டோசர் மாமா’ என்று பெயர் சூட்டியதற்காக ஒரு முதல்வர் பெருமிதம் கொண்டார் என்றும் ப.சிதம்பரம் சாடினார். ‘புல்டோசர் நீதி’யை கடைபிடித்த மாநில அரசுகளை கடுமையாக வீழ்த்த உச்ச நீதிமன்றம் பல வாய்ப்புகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், இறுதியாக, வாள் வீழ்ந்துவிட்டதாகவும், இனி சட்ட ரீதியான விளைவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புல்டோசர் நீதியை உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்துள்ளதாகவும், ஆனாலும், புல்டோசர் நீதி வழங்கப்படுவதைப் பிரச்சாரம் செய்து கொண்டாடியவர்களுக்கு வெட்கம் இல்லை என்றும் ப.சிதம்பரம் விர்மசித்துள்ளார். மேலும், இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் யாராவது மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளளார். ஆபரேஷன் தாமரை, தேர்தல் பத்திரங்கள் போன்ற பிரபலமற்ற பட்டியலில் புல்டோசர் நீதியும் இணைந்துள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.