பெங்களூருவில் ஓட்டுநர் மரடைப்பால் உயிரிழந்த நிலையில், தறிகெட்டு ஓடிய பேருந்தை நடத்துடர் தாவிக்குதித்து நிறுத்தி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீலாமங்களாவில் இருந்து மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்து ஒன்று தாசனபுரா நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை கிரண்குமார் (40 வயது) என்கிற ஓட்டுநர் ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார். அதேவேளையில் கண் இமைக்கும் நேரத்தில் அருகில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது லேசாக மோதியவாறு பேருந்து தறிகெட்டு ஓடியது. இதனைப் பார்த்த நடத்துநரும், பயணிகளும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
பின்னர் சாமர்த்தியமாக செயல்பட்ட நடத்துநர் ஓபலேஷ், உடனடியாக தாவிகுத்து ஓட்டுரின் இருக்கையில் அமர்ந்து, ஸ்டேரிங்கை பிடித்து, பேருந்தை சாலையோரம் திருப்பி பிரேக் போட்டு நிறுத்தினார். நடத்துனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பேருந்து சாலியோரம் நிறுத்தப்பட்டது. இந்த காட்சிகள் பேருந்தில் பொருந்தப்பட்டிருந்த சிசிசிடி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே மாரடைப்பால் சரிந்து விழுந்த ஓட்டுநர் கிரண்குமாரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பேருந்து விபத்தில் சிக்காமல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துநர் ஓபலேஷ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். அதேநேரம் பணியின் போது ஓட்டுநர் கிரண்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்து ஓட்டிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
விரைவாக செயல்பட்டு நடத்துநர் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு.#Bangalore #BusDriver #Conductor #Karnataka #ApcNewsTamil pic.twitter.com/cNTVeeprcO
— APC NEWS TAMIL (@apc_news_tamil) November 7, 2024