Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!

சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!

-

 

சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!
Photo: ANI

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, ஜெர்மனியைச் சேர்ந்த சீமென்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 375 கோடியை வழங்கியதில் முறைகேடு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு, மாநில சிஐடி காவல்துறையினருடன், அமலாக்கத்துறையும் இந்த ஊழல் வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த 2021- ஆம் ஆண்டு பதிவான வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நந்தியாலா பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவில் தனது வாகனத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும் இரு மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

வேலூர், திருப்பத்தூரில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் இரு மாநில பேருந்துகள் நிறுத்தப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் திருப்பி வருவதற்காக பேருந்துக்காகக் காத்திருக்கின்றன.

“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

அதேபோல், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஆந்திரா மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.

MUST READ