தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு, மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த தொகையின் 200 கோடி ரூபாயாகவும், பின்னர் 400 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு மின்னஞ்சல் வந்தது.
இதுப்போன்று மொத்தம் ஐந்து மின்னஞ்சல்கள் ஒரே முகவரியில் இருந்து வந்துள்ளது. எவ்வளவு முயற்சித்தாலும், என்னை பிடிக்க முடியாது என்றும், உங்களை கொலைச் செய்ய ஒரே ஒரு துப்பாக்கிக்கு கொண்டு போதும் என மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்ததால், பதற்றம் அதிகரித்தது.
இது தவிர மேலும் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், 500 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!
இதற்கிடையே, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்த தெலுங்கானா மாநிலம், வாரங்கல்லைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் என்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் 500 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் ஆவார்.
அத்துடன், 20 வயதான இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம், காந்தி நகரைச் சேர்ந்த இவர் 400 கோடி ரூபாய் கேட்டு ஐந்து மின்னஞ்சல்களை அனுப்பியவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.