Homeசெய்திகள்இந்தியாசி.ஏ.ஏ.- உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மீண்டும் மனு!

சி.ஏ.ஏ.- உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மீண்டும் மனு!

-

- Advertisement -

 

உச்சநீதிமன்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மனுத்தாக்கல் செய்திருந்தது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நேற்று (மார்ச் 12) நாடு முழுவதும் அமல்படுத்தியது மத்திய அரசு. சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தியதற்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததுடன், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என்றழைக்கப்படும் ஐயூஎம்எல் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ பட அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு!

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ