கர்நாடகா மாநிலத்தில் அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியை கணவன் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிபெல் படத்தின் முன்னோட்டம் அப்டேட்
கர்நாடகா மாநிலம், ஹோசக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பிரதீபா- கிஷோர் தம்பதி கடந்த 2022- ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டனர். கிஷோர் காவலராகப் பணியாற்றி வரும் நிலையில், தனது மனைவி அடிக்கடி நண்பர்களுடன் பேசுவதைக் கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், தனது தாய் வீட்டிற்கு பிரதீபா சென்றுவிட்டார்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக மனைவியைத் தொலைபேசி மூலமாக, தொடர்புக் கொள்ள பலமுறை முயற்சித்தும், அவர் அழைப்பை ஏற்காததால், கோபமடைந்த கிஷோர் பிரதீபாவின் தாய் வீட்டிற்கு சென்று தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன், துணியால் பிரதீபாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
முதலில் வெளிவருவது கேப்டன் மில்லர் பாகம் 2… ரசிகர்களை குழப்பும் இயக்குநர்…
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பிரதீபாவின் சடலத்தைக் கைப்பற்றியதுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிஷோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.