Homeசெய்திகள்இந்தியாகனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!

-

 

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!
File Photo

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அந்நாட்டு அரசு மனிதாபிமானத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“மாணவர்களின் நலனே முக்கியம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் கல்விப் பயின்று வருகின்றனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், போலி ஆவணங்களைக் கொடுத்து இந்திய மாணவர்கள் கனடாவில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது.

இதற்கான ஆவணங்களைச் சுட்டிக்காட்டியுள்ள கனடா அரசு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தை அறிந்து, இந்திய அரசின் தலையீட்டின் காரணமாக, இந்திய மாணவர்களை வெளியேற்றும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கனடா அரசு. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு அமைச்சரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை

மாணவர்களுக்கு விசா வழங்கியது கனடா நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தான் எனவும், இது அந்நாட்டு சிஸ்டத்தின் தவறாக இருக்குமே தவிர, மாணவர்களின் தவறாக இருக்காது எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என கனடா அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ