லட்சத்தீவு எம்.பி.யின் தகுதி நீக்கம் ரத்து
லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப்பெற்றது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல் லட்சத்தீவு எம்.பி.யாக பதவி வகித்தார். இவர் கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சாலேயை கொலை முயன்றதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கவரட்டி செஷன்ஸ் நீதிமன்றம், முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து எம்.பி. தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரி தீர்ப்புக்கு தடை விதித்து இரண்டு மாதங்களாகியும் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறாததால் உச்ச நீதிமன்றத்தில் பைசல் மனு அளித்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் முகமது பைசல் மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தகுதி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.