Homeசெய்திகள்இந்தியா"பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்"- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

“பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

-

 

"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
Photo: PM Narendra Modi

விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”

மறைந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், விஜயாகாந்த் மறைவால் பலர் நல்ல தலைவரை இழந்தனர்; நான் அன்பான ஒரு நண்பரை இழந்துவிட்டேன். திரைப்படங்களில் அநீதி, ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் கதா பாத்திரங்களில் நடித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் விஜயகாந்த் அரசியலில் இறங்கினார்.

விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர். அனைவரின் முன்னேற்றம், சமூக நீதிக்கான விஜயகாந்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்” உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 3,000 வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

இதனிடையே, திருச்சியில் நேற்று (ஜன.03) நடந்த அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த் குறித்தும், அவரது மறைவுக்கு தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ